பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் கொள்முதல் மற்றும் வழங்குநர் செயல்முறை தொடர்பில் சஜித் சபையில் கேள்வி

நாட்டின் எரிபொருள் விநியோகம், பெறுகை செயல்முறை மற்றும் கொள்முதல் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை, செயல்திறன் தொடர்பாக நிலவும் பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் கொள்முதல் மற்றும் வழங்குநர் செயல்முறை தொடர்பான விடயங்களை ஆராயும் நோக்கத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

நிலையியற் கட்டளை 27/2இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (7) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகள் பின்வருமாறு :

01. கடந்த 12 மாதங்களில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் (CPC) புதிய வழங்குநர் எத்தனை பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்? அவர்கள் யாவர்?

02. கடந்த 12 மாதங்களில் ஏதேனும் வழங்குநர் (புதியவர் அல்லது பழையவர்) தங்கள் வழங்கலை தவறியுள்ளனரா? ஆம் எனில், யார், எப்போது?

03. அத்தகைய தவறு நிகழ்ந்த சந்தர்ப்பங்களில் வழங்குநர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவை?

04. கடந்த 12 மாதங்களில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தால் கோரப்பட்ட அவசர கொள்வனவு (Spot Tenders / Short term) மற்றும் நீண்டகால ஒப்பந்தங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தவணை கொள்வனவு (Term Tenders) தனித்தனியாக எவ்வளவு?

05. அந்த கொள்முதல்களுக்கு பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப (Technical) மற்றும் வணிக (Commercial) மதிப்பீட்டு அளவுகோல்கள் என்னென்ன? அந்த அளவுகோல்களை பிற வெளிநாட்டு அரசுகளின் பெறுகைகளோடு ஒப்பிட்டு முன்வைக்க முடியுமா?

06. அப்போதைய ஒப்பந்தத்தின் செல்லுபடியாகும் காலத்தில் நிலையில் கேள்வி கோரல் வழங்க ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதா? இந்த முடிவுகள் Standing Cabinet Appointed Procurement Committee (SCAPC)ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா? நீண்டகால ஒப்பந்த விலைக்கும் அவசர கொள்முதல் விலைக்கும் இடையிலான ஒப்பீட்டு அறிக்கையை சபைக்கு சமர்ப்பிக்க முடியுமா?

07. கடந்த 12 மாதங்களில் மிக அதிக விலையில் மேற்கொள்ளப்பட்ட மூன்று வழங்குநர்களுக்கு எத்தனை கேள்வி கோரல்கள் காணப்பட்டன? அந்த பெறுகைகளை வழங்கிய வழங்குநர்கள் யாவர்?

08. சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் ஈரானிய லைட் கச்சா எண்ணெய்க்கு பதிலாக மர்பன் வகை எண்ணெய் பயன்படுத்துவதால் சுத்திகரிப்பு உற்பத்தி விகிதங்கள், சுத்திகரிப்புச் செலவுகள் மற்றும் இறுதி விலைகள் எவ்வாறூ மாறி காணப்படுகின்றன?

09. பெறுகை தீர்மானங்களுக்கான தொழில்நுட்ப மதிப்பீட்டு குழு மற்றும் அமைச்சரவை மட்ட கொள்முதல் குழு பரிந்துரைகளுக்கு இடையில் வேறுபாடுகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றனவா? அதிக பெறுமானம் கொண்ட எரிபொருள் கொள்முதல்களுக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் கணக்காய்வு முறைமை காணப்படுகின்றனவா? இத்தகைய கணக்காய்வு அறிக்கைகளை சபைக்கு சமர்ப்பிக்க முடியுமா?

இவ்வாறு சஜித் பிரேமதாச கேள்விகளை எழுப்பியுள்ளார்.