பெல்லன்வில துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் உயிரிழப்பு

பெல்லன்வில பகுதியில் இன்று சனிக்கிழமை (25) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து களுபோவிலை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 55 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, பெல்லன்வில பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 55 வயதுடைய ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் களுபோவில  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும், வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டின் பின்னணி மற்றும் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

உயிரிழந்த நபரின் அடையாளம் மற்றும் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.