மடவளை நகரத்தில் தீ பரவல்

கண்டி, மடவளை நகரத்தில் கடைத் தொகுதி ஒன்று தீப்பிடித்து,  இரண்டு கடைகள் முற்றாக பாதிக்கப்பட்டதுடன், மற்றும் மூன்று கடைகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் சனிக்கிழமை (30) காலை  இடம் பெற்றுள்ளது.

மடவள – தெல்தெனிய பிரதான சந்தியில் உள்ள உயர்ரக பாதணிகள் விற்கும் கடையொன்றில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகவே இத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேற்படி பாதணிகள் விற்பனை செய்யும் கடையில் சுமார் ஒருகோடி ரூபாய்கும் மேற்பட்ட நட்டம் ஏற்பட்டுள்ளது.

அதே கடையின் மேல் மாடியில் இருந்த ஆடையணிகள் விற்பனை நிலையம் மற்றும் ஆடை தைக்கும் நிலையமும்  இதனால்  பாதிக்கப்பட்டன.

அண்மித்த கடைகளுக்கு தீ பரவ ஆரம்பித்த சமயம் பொதுமக்களும் தீயணைப்புப்பிரிவினரும் வந்து தீயைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பொதுமக்கள் விழிப்படைந்ததால் அதிகளவு பொருட்கள் பற்றி எரிவதில் இருந்து பாதுகாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் நடக்கும் போது மேற்படி கடை காலை நேரம் திறக்கப்பட்டிருக்கவில்லை என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில்  வத்தேகம பொலிஸார் விசாரணைகளை

மேற்கொண்டுள்ளனர்.