ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார இன்று (8) காலை இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
தேர்தல் காலங்களில் அரசுக்கு சொந்தமான பெருந்தோட்ட நிறுவனங்களை தவறாகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர்பாகவே இவருக்கு எதிராக இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.


