யாழில் ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம்

சோமசுந்தர ஞானத் தமிழ்மன்றத்தின் ஏற்பாட்டில் ஆடிப்பிறப்புக் கொண்டாட்ட நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (17.07.2026) முற்பகல்-10 மணியளவில் யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்துக்கு முன்பாக உள்ள தங்கத் தாத்தா நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் உருவச் சிலையடியில் சோமசுந்தர ஞானத் தமிழ்மன்றத்தின் தலைவர் கே.எஸ்.சிவஞானராஜா தலைமையில் நடைபெறும்.