யாழில் நீண்ட காலம் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர் கைது!

யாழில் நீண்ட காலம் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(25.4.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது. குருநகர் பகுதியில் வைத்து 31 வயதுடைய சந்தேகநபர்  நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 2 கிராம் 35 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

குறித்த சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.