சர்ச்சைக்குரிய சட்டவிரோத திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியை யாழ் மண்டைதீவில் திங்கட்கிழமை (01.09.2025) நடந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் முன்வரிசையில் அழைத்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவரிடம் ஆசிர்வாதம் பெற்ற செயற்பாடு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சிறிலங்கா ஜனாதிபதியின் செயற்பாட்டிற்கு தையிட்டியில் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். அதுமாத்திரமன்றித் தமிழர் மத்தியில் இதற்கு கடும் விசனமும், கண்டனங்களும் எழுந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.





