நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று வியாழக்கிழமை (14.05.2026) முற்பகல்-11 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது அண்மையில் தீ விபத்தில் எரிந்து பாரிய சேதமடைந்த மருந்துக் களஞ்சியசாலையைப் பார்வையிட்டதுடன் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.சத்தியமூர்த்தியுடன் கலந்துரையாடினார். வைத்தியசாலையின் தேவைகள், குறைபாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.





