யாழ்.பல்கலைக்கழகத்தில் தியாகி திலீபனுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி

தியாகதீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு வெள்ளிக்கிழமை (26.09.2025) நண்பகல்-12 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள பொது நினைவுத் தூபியடியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படத்துக்கு முன்பாகப் பொதுச் சுடரேற்றப்பட்டு அக வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.