யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சர்வதேச தாதியர் தினம் நேற்று செவ்வாய்க்கிழமை (12) அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, தாதிய பயிற்சி கல்லூரி விரிவுரையாளர்கள், மூத்த தாதியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, தாதியர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையைப் பாராட்டும் நிகழ்வுகளும், தாதியர் தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு நாடகங்களும் நடத்தப்பட்டன.




