யாழ். மறைமாவட்ட ஆயரை சந்தித்தார் நாமல் ராஜபக்ஷ

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ யாழ்ப்பாணத்துக்கு இன்று வியாழக்கிழமை (12) விஜயம் செய்த நிலையில், யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ். ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.