தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்து வகையான குருதிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையைக் கருத்திற் கொண்டு வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கம், வல்வெட்டித்துறைப் பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்துடன் இணைந்து முன்னெடுத்த 82 ஆவது மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (16.11.2025) காலை-08.30 மணி முதல் மாலை-03.30 மணி வரை வல்வெட்டித்துறை கணபதி மஹால் திருமண மண்டபத்தில் வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கத் தலைவர் பா.வீரசுரேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் தொடர் மழைக்கு மத்தியிலும் 90 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கி உயிர்காக்கும் இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் குருதிக் கொடை வழங்கிய அனைவரதும் பெயர்கள் உள்வாங்கப்பட்டு அதிர்ஷ்ட முறையில் தெரிவு செய்யப்பட்டு வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தயானந்தன் தனுசியா நிகழ்வின் இறுதியில் பெறுமதியான வெள்ளிப் பதக்கம் அணிவித்துக் கௌரவிக்கப்பட்டார். அத்துடன் குருதிக் கொடை வழங்கிய அனைவருக்கும் பெறுமதியான குடையும் வழங்கப்பட்டது.





