போதைப்பொருள் கடத்தல்காரரான “வஸ்கடுவே ரோசா”என்பவர் களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று வியாழக்கிழமை (25) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பயாகலை – லன்சியாவத்த பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பல தடவைகள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
“வஸ்கடுவே ரோசா”என்பவர் இராணுவ சேவையிலிருந்து விலகிய சிப்பாய் ஒருவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரிடமிருந்து ரி-56 ரக துப்பாக்கிக்கு உரிய 29 தோட்டாக்கள் மற்றும் ஒரு ஜோடி கைவிலங்கு என்பன கைப்பற்றப்டப்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.



