வென்னப்புவ கடலில் இன்று செவ்வாய்க்கிழமை (13) குளித்துக் கொண்டிருந்த நான்கு பேரில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏனைய 3 பேரும் காணாமல்போயுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கை இடம்பெறுவதாக தெரிவித்தனர்.
இவ்வாறு கடலில் குளித்துக் கொண்டிருந்த நால்வரும் பொகவந்தலவை பகுதியைச் சேர்ந்தவர்கள் என வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
நான்கு பேரும் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் சிறிது நேரத்தின் பின்னர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டதாகவும் ஏனைய 3 பேரும் காணாமல்போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.