1929 ஆதரவு சேவை விழிப்புணர்வு ஸ்டிக்கர் நிகழ்வில் அமைச்சர் சரோஜா பங்கேற்பு

2025ஆம் ஆண்டு உலக சிறுவர்கள் தினத்திற்காக அறிவிக்கப்பட்ட  “சிறுவர்கள் தின தேசிய வாரத்தின்” இரண்டாவது நாளைக் குறிக்கும் வகையில், தேசிய சிறுவர்கள பாதுகாப்பு ஆணைக்குழுவினால் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட “1929 சிறுவர்கள் ஆதரவு சேவை விழிப்புணர்வு ஸ்டிக்கர்” நிகழ்ச்சியில் தாம் பங்கேற்றதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.

பாடசாலை குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தேசிய போக்குவரத்து ஆணையகத்தின் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டதாகவும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர்; குறிப்பிட்டார்.

மேலும் போக்குவரத்து சேவை உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் உதவியாளர்களுக்கும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் பங்கேற்ற பாடசாலை போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுடன் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பும் கிடைத்ததாகவும்  மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்காலத்தில் போக்குவரத்தில் சிறுவர்களைப்; பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் வெற்றிக்கு இந்த உரையாடல் ஒரு ஊக்கமாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் திருமதி பிரீத்தி இனோகா ரணசிங்க மற்றும் அவரது குழுவினர், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, இலங்கை பொலிஸ் மற்றும் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு ஆணைக்குழுவின் பல்கலைக்கழக மாணவர் தூதுவர் திட்டத்தின் சிறுவர்களும்; இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

நாட்டில் பல பாடசாலைகளை உள்ளடக்கிய இந்த திட்டம் நாள் முழுவதும் செயல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.