யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி அமைந்துள்ள பகுதிக்குச் சென்ற இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் அங்கு அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கத்தின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தொல். திருமாவளவன், செம்மணி மனிதப் புதைகுழி அமைந்துள்ள பகுதிக்குச் சென்று உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினார்.
உள்நாட்டுப் போரின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் தொடர்பான நீதியையும் உண்மையையும் வெளிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக செம்மணி மனிதப் புதைகுழி அமைந்துள்ளது.
அங்கு சென்ற தொல். திருமாவளவன், உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து தனது அஞ்சலியைச் செலுத்தினார்.


