ஈரானைக் கொல்லும் இயந்திரம் முடிவுக்கு வர வேண்டிய நேரம் இது!

ஹோர்முஸ் நீரிணையில் நேற்று ஈரான் துப்பாக்கிச் சூடு நடத்தியது, எங்களின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக மீறிய செயல் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ருத் சோஷியல் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் சில குண்டுகள் பிரான்ஸ் கப்பல் மற்றும் ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த சரக்கு கப்பலை நோக்கி செலுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், தனது பிரதிநிதிகள் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்கு பேச்சுவார்த்தைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்கள் நாளை மாலை அங்கு இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதாக அறிவித்தது “விசித்திரமானது” என கூறிய அவர், அமெரிக்காவின் தடையால் அது ஏற்கனவே மூடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதனால் ஈரானே தினமும் சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பை சந்திக்கிறது என்றும், அமெரிக்காவுக்கு எந்த இழப்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

உண்மையில், எப்போதும் “வலிமையானவனாக” இருக்க விரும்பும் ஈரானிய புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) உபயத்தால், பல கப்பல்கள் இப்போது அமெரிக்கா, டெக்சாஸ், லூசியானா மற்றும் அலாஸ்காவிற்கு சரக்குகளை ஏற்றிக்கொண்டு செல்கின்றன.

நாங்கள் மிகவும் நியாயமான மற்றும் ஏற்கத்தக்க ஒரு ஒப்பந்தத்தை வழங்குகிறோம்.

 

அவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன், ஏனென்றால், அவர்கள் அதை ஏற்கவில்லை என்றால், அமெரிக்கா ஈரானில் உள்ள ஒவ்வொரு மின் நிலையத்தையும், ஒவ்வொரு பாலத்தையும் தகர்த்துவிடும். இனிமேலும் அவர்கள் விரைவாகவும் எளிதாகவும் வீழ்வார்கள்.

ஒருவேளை அவர்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்கவில்லை என்றால், கடந்த 47 ஆண்டுகளாக மற்ற ஜனாதிபதிகளால் ஈரானுக்குச் செய்யப்பட்டிருக்க வேண்டியதை, செய்வது எனது கௌரவமாக இருக்கும்.

ஈரானைக் கொல்லும் இந்த இயந்திரம் முடிவுக்கு வர வேண்டிய நேரம் இது! என குறிப்பிட்டுள்ளார்.