கிணற்றுக்குள் பாய்ந்த வேன்: குழந்தை உட்பட 5 பேர் பரிதாப பலி..!

இந்தியாவில் 50 அடி ஆழ கிணற்றுக்குள் வேன் ஒன்று  பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்றரை வயது குழந்தை, 2 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள வெள்ளாளன்விளை ஆலயத்தில் பிரதிஷ்டை விழா நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக, கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூரில் இருந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் வேனில் சென்றுள்ளனர்.

சனிக்கிழமை (17) மாலை 4 மணி அளவில், சாத்தான்குளம் அருகே உள்ள சிந்தாமணி- மீரான்குளம் பகுதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த 50 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்துள்ளது.

இந்த விபத்தில், ஒன்றரை வயது குழந்தை ஸ்டாலின் ஆகிய 5 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 3 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் விரைந்து சென்று 5 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.