சாம்பியாவின் கிழக்குப் பகுதியில், யானைகளின் கூட்டத்திலிருந்து தப்பிக்க ஓடிய 52 வயதுடைய மீனவர் ஒருவர் முதலை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த மீனவர் தனது இரண்டு நண்பர்களுடன் மீன்பிடித் தொழிலில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த போது யானைகளின் கூட்டத்தை கண்டு அச்சமடைந்து ந்யிரெண்டா, லுவாங்கா (Luangwa) நதிக்கு அருகிலுள்ள ஓடையில் குதித்துள்ளார்.
இதன் போது ஒரு முதலை அவரது வலது தொடையை கடித்து தாக்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனை தொலைவில் இருந்து பார்த்திருந்த அவரது நண்பர்கள், அவரை அதிக இரத்தப்போக்குடன் இருந்த நிலையில் நதிக்கரையிலிருந்து தூக்கிச் சென்றதாக செய்தி வெளியாகியுள்ளன.
அவர்கள் இரத்தப்போக்கை நிறுத்த முற்பட்ட போதும் துரதிருஷ்டவசமாக அவர் உயிரிழதுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென் ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள சாம்பியா நாட்டில் யானைகளின் அதிகமான எண்ணிக்கை காணப்படுகிறது. மனிதர்கள் மற்றும் வனவிலங்குகளுக்கிடையேயான மோதல்கள் கடந்த ஆண்டுகளில் பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
சாம்பியாவின் தெற்கு லுவாங்கா தேசிய பூங்காவை வழியாக பாயும் லுவாங்கா நதி, ஆப்பிரிக்காவில் நைல் முதலைகள் அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் ஒன்றாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





