சிக்காகோவில் தொழிலாளர் தின வார இறுதியில் இடம்பெற்ற பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 08 பேர் உயிரிழப்பு ; 50 பேர் காயம்

சிக்காகோவில் தொழிலாளர் தின வார இறுதியில்  இடம்பெற்ற பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதோடு, 50 பேர் காயமடைந்தனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை இரவுக்கும் திங்கள் இரவுக்கும் இடையில், நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான சிக்காகோவில் நடந்த 37 தனித்தனி துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் மொத்தம் 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு தொழிலாளர் தின வார இறுதியில், ஏழு பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் ஆறு பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். மேலும் விடுமுறை வார இறுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என பொலிஸார் தெரிவித்தனர்.