தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று திங்கட்கிழமை (12) ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 26ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றார் என்ற தகவலுக்கு அமைய மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணையின் போதே அவர் ஐஸ் போதைப்பொருளுடன் 6ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மஹிந்த கஹந்தகமவை இம்மாதம் 12ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.