இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க அதிகாரியை செவ்விகண்ட அமெரிக்க தூதுவர் ? தெரிவித்திருப்பது என்ன?
ஜனநாயகம் என்பது கூச்சல்மிகுந்ததாகயிருக்கலாம்,ஒரளவு அசுத்தமானதாகயிருக்கலாம் ஆனால் இறுதியில் என்ன முக்கியம் என்றால் மக்களின் குரல்கள் செவிமடுக்கப்படவேண்டும்,மக்களின் குரல்கள் மதிக்கப்படவேண்டும்,அனைத்து மக்களும் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்ற ஜனநாயகம் காணப்படவேண்டும் என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் வெர்மா தெரிவித்துள்ளார்
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்பிரதி இராஜாங்க செயலாளரை பேட்டி கண்டு தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இலங்கை இந்தோபசுபிக்கின் இதயத்தில் உள்ளது இந்த பிராந்தியத்தின் – உங்கள் விஜயம் பற்றிய உங்கள் கருத்து என்ன?
பதில்- இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உறவு,
நீங்கள் தெரிவித்தது போல இந்துசமுத்திரத்திற்கும், எங்களின் கடல்நடமாட்ட சுதந்திரத்தை உறுதிசெய்வதற்கும் வர்த்தகம் கடற்பயணம் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளை உறுதிசெய்வதற்கும் இலங்கையுடனான இந்த கூட்டுபங்காண்மை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
எங்கள் இருநாடுகளிற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்காக நீங்கள் ஆற்றிய பணிகளுக்கு நன்றி.
நான் இங்குவந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் எதிர்காலத்திற்கான ஆற்றம்வளத்தையும் பார்வையிடமுடிந்ததுகுறித்து நான் மகிழ்;ச்சியடைந்துள்ளேன்.
ஜூலி – இந்த வருடம் அமெரிக்காவில் தேர்தல்கள் இடம்பெறவுள்ளன – இலங்கையிலும் தேர்தல்கள் இடம்பெறவுள்ளன வளரும் ஜனநாயகம் என்பது பல விடயங்களை அடிப்படையாக கொண்டுள்ளது உங்கள் கருத்து என்ன?
பதில்- ஜனநாயகம் என்பது கூச்சல்மிகுந்ததாகயிருக்கலாம்,ஒரளவு அசுத்தமானதாகயிருக்கலாம் ஆனால் இறுதியில் என்ன முக்கியம் என்றால் மக்களின் குரல்கள் செவிமடுக்கப்படவேண்டும்,மக்களின் குரல்கள் மதிக்கப்படவேண்டும்,அனைத்து மக்களும் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்ற ஜனநாயகம் காணப்படவேண்டும்
இதன் அர்த்தம் என்னவென்றால் சிவில் சமூகத்தினடமிருந்து செவிமடுக்கவேண்டும் வர்த்தக சமூகத்தினரை செவிமடுக்கவேண்டும்,கல்விமான்கள் கருத்துக்களை கொண்டுள்ள தனிநபர்கள் என அனைவரினதும் கருத்துக்களை செவிமடுக்கவேண்டும்.
அமெரிக்காவில் இது இடம்பெறும் என நான் எதிர்பார்க்கின்றேன்.
இலங்கையில் உயிர்த்துடிப்புள்ள சிவில் சமூகம் உள்ளது அவர்களின் குரல்களை செவிமடுக்கவேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம்.
ஜூலிசங்- நீங்கள் இதற்கு முன்னரும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளீர்கள் அது குறித்து தெரிவிக்க முடியுமா?
பதில்-நான் இந்தியாவிற்கான தூதுவராக பணியாற்றியிருக்கின்றேன் அவ்வேளை இங்குவந்து இந்த அழகியதீவை பார்வையிட்டுள்ளேன் நாங்கள் கடற்கரைகளுக்கு சென்றிருக்கின்றோம் இயற்கை வாழ்விடங்களையும் வனவிலங்குகளையும் பார்வையிட்டிருக்கின்றோம்.
ஒருநாள் நான் இந்த நாட்டிற்கு சுற்றுலாப்பயணியாக வருவேன் ஆனால் ஒரு விடயத்தை தெரிவிக்கவேண்டும் இது இலங்கையின் வருமானத்திற்கு பெரும் பங்களிப்பைவழங்குகின்றது சுற்றுலாபொருளாதாரம் என்பது மிகவும் முக்கியமானது.
இது வியக்கத்தக்க மக்களை கொண்ட அழகான நாடு இந்த இருதரப்பு உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துசெல்வதற்காக நீங்கள் செய்யும் அனைத்திற்கும் நன்றி.
இது மிகவும் பாராட்டத்தக்க விடயம் அமெரிக்க மக்களுக்கும் இலங்கை மக்களுக்கும் உங்களின் பணிகள் மிக முக்கியமானவை.





