வட்டுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட மட்டத் தடகள விளையாட்டுப் போட்டி

யாழ்.மாவட்டச் செயலகமும், சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடாத்திய மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட மட்டத் தடகள விளையாட்டுப் போட்டி செவ்வாய்க்கிழமை (09.06.2026) காலை-08.30 மணியளவில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் யாழ்.மாவட்ட அரச அதிபர்  மருதலிங்கம் பிரதீபன்
தலைமையில்  நடைபெற்றது.
நிகழ்வில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் ஓய்வுநிலை விரிவுரையாளரும்,, சுன்னாகம் வாழ்வகம் விழிப்புலன் வலுவிழந்தோர் இல்லத் தலைவருமான ஆறுமுகம் ரவீந்திரன் பிரதம விருந்தினராகவும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் அதிபர் திருமதி.ருஷிறா குலசிங்கம் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டிருந்தனர்.