இன்னுமொரு வருடம் பிறந்துள்ள போதிலும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியாவிற்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் பல குடும்பங்களிற்கும் 2024 நீதியை தேடும் மற்றுமொரு வருடமாக காணப்படுகின்றது.
2010 ஜனவரி 24 ம் திகதி காணாமல்போன பின்னர் பிரகீத்தினை கௌரவித்து பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன சர்வதேச மேடைகளில் அவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
2023 டிசம்பர் ஏழாம் திகதி பிரான்ஸ் தலைநகரில் உள்ள பல்கலைகழகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மனித கௌரவத்திற்காக ஏசிஏடி அமைப்பு பிரகீத்தி;றகு விருதினை வழங்கியிருந்தது.
2022 யூன்மாதம் சர்வதேச ஊடகவியலாளர்கள் சம்மேளனம் பிரகீத்தின் பங்களிப்பை கௌரவித்திருந்தது.
ஜனவரி இரண்டாம் திகதியுடன் பிரகீத் காணாமல்போய் 5090 நாட்கள் 14 வருடங்கள் என சந்தியா சமீபத்தில் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
ஆனால் இன்னமும் நீதி நிலைநாட்டப்படவில்லை நான் இதுவரை பயணித்த பாதை குறித்து எனக்கு திருப்தி இந்த விருதுகளும் கௌரவங்களும் அதற்கான அங்கீகாரம் என அவர் குறிப்பிட்டார்.

வலிந்து காணாமலாக்கப்படுதலால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களிற்கு எனது கதை பயணம் நம்பிக்கையை பயனை அளித்துள்ளது என நான் நம்புகின்றேன் என தெரிவித்த சந்தியா எனது கணவர் காணாமலாக்கப்பட்ட பின்னர் அவருக்காக குரல்கொடுப்பதற்காக நான் முன்வந்தேன் எனவும் குறிப்பிட்டார்.
உலகம் அவரது பங்களிப்பை பாராட்டும் அதேவேளை நான் அவர் காணாமலாக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து சில விடயங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன் 2010 – முதல் 2015 வரை ராஜபக்ச ஆட்சியாளர்கள் ஆட்சியிலிருந்தனர்-பிரகீத்தை என்னிடமிருந்தும் எனது பிள்ளைகளிடமிருந்தும் பறித்த அரசாங்கம் ஆட்சியிலிருந்தது.
என சந்தியா எக்னலிகொட குறிப்பிட்டார்
2015 முதல் 2019 வரை காணமல்போதல் எவ்வாறு நிகழ்ந்தது என்ன நடந்தது என்பது குறித்து ஒரளவு தகவல்களை பெற முடிந்தது என சந்தியா தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் குறித்து அறிந்து கொள்ள முடிந்தது இராணுவ அதிகாரிகள் நீதிமன்றங்களிற்கு அழைக்கப்பட்டார்கள் ஆனால் 2019 இறுதியில் வழக்கு தாக்கப்பட்டது ஆனால் ஐந்து வருடங்களின் பின்னரும் இந்த வழக்கு ஆரம்பகட்டங்களிலேயே உள்ளது என்பதை கவலையுடன் தெரிவிக்கி;றேன் எனவும் குறிப்பிட்டார்.
2019 இல் ஆட்சிக்குவந்த அரசாங்கம் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சில குற்றவாளிகளை விடுதலை செய்ய முயற்சித்ததுஎன சந்தியா எக்னலிகொட குறிப்பிட்டார்
கோட்டாபய ராஜபக்ச அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஓய்வுபெற்ற நீதிபதி உபாலி அபயரட்ண தலைமையில் நியமித்தார் அந்த ஆணைக்குழு இந்த குற்றவாளிகளை விடுதலை செய்து விசாரணைகளை மேற்கொண்டவர்களை கைதுசெய்ய உத்தரவிட்டது என சந்தியா தெரிவித்துள்ளார்.
ராஜபக்சா அரசாங்கம் மீண்டும் அதிகாரத்திற்கு வந்தால் இந்த பரிந்துரைகள் செல்லுபடியாகுமா என்ற கேள்வி எனக்குள் உள்ளது என அவர்தெரிவித்துள்ளார்.
இரண்டு முக்கியமான சாட்சியங்கள் அழிக்கப்பட்டுவிட்டனர் அவர்களின் வாக்குமூலங்கள் 2015 முதல் 2023 ம் ஆண்டுகளிற்குள் மாற்றப்பட்டுள்ளன அவர்கள் பொய் சொல்ல நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெளிவான விடயம் இராணுவத்துடன் தொடர்புள்ள நீதிபதியொருவர் இருக்கின்றார் 2023 ஆகஸ்ட்மாதம் நான் இது குறித்து பிரதமநீதியரசரின் கவனத்திற்கு கொண்டு வந்தேன் பிரகீத் வழக்கிற்கு நீதி வழங்குவதற்காக டிரையல் அட் பார் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டேன் எனவும் அவர் தெரிவித்தார்.
எனினும் இந்த வழக்கில் பிரதான சாட்சி முக்கியமாக பாதிக்கப்பட்டவர் இந்த நாட்டின்பிரஜை என்ற அடிப்படையில் நான் விடுத்த வேண்டுகோளை இன்றுவரை அவர் செவிமடுக்கவில்லை.
இந்த கடிதத்தை ஜனாதிபதிக்கும் அனு;பபினேன் இன்றுவரை இதற்கு பதில் இல்லை.
நான் கடந்த 14 வருடங்களாக பால்சோறு சமைக்கவில்லை இந்த தருணத்தில் ஜனாதிபதிக்கு ஒரேயொரு வேண்டுகோளை மாத்திரம் நான் விடுக்கின்றேன் – உலகம் பிரகீத்தை பாராட்டலாம் ஆனால் எனக்கு நீதி வேண்டும்இ
நான் இந்த வழக்கு சுயாதீன நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படுவதை விரும்புகின்றேன் எதிர்பார்க்கின்றேன் ராஜபக்சாக்களிற்கு அடிபணியும் நீதிமன்றங்களில் இந்த வழக்கு விசாரணை செய்யப்படுவதை நான் விரும்பவில்லை.
2024 இந்த நாட்டு மக்களிற்கும் ஜனாதிபதிக்கும் தீர்க்கரமான ஆண்டாக காணப்படவேண்டும் இந்த வழக்கு நியாயமான நேர்மையான முறையில் முடிவிற்கு வரவேண்டும் என்பதே எனது விருப்பம்.அதன் மூலம் நானும் எனது பிள்ளைகளும் நிம்மதியாக வாழலாம்.என தெரிவித்துள்ளார்.
kamanthy wikiramasinga
தமிழில் – ரஜீவன்




