ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை உட்பட ஏனைய பொது சேவைகள் நாளை வெள்ளிக்கிழமை (17) இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கணினிக் கோளாறு இதுவரை சரிசெய்யப்படாமையே இதற்குக் காரணமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கோளாறு காரணமாக, திணைக்களத்தின் தலைமையகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் பாதிக்கப்படவுள்ளன. குறிப்பாக, ஒரே நாள் சேவை (One-day service) உட்பட அனைத்து செயல்பாடுகளும் நாளை நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணினிக் கோளாறை சரிசெய்ய தேவையான தொழில்நுட்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை பொதுமக்கள் பொறுமையாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.




