தம்புள்ள – மாத்தளை பிரதான வீதியில் நாவுல, நாலந்த பகுதியில் இன்று (26) காலை இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் தனியார் பஸ் ஒன்றும், இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் சம்பந்தப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் தனியார் பஸ்ஸின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ள நிலையில், இலங்கைப் போக்குவரத்து சபை பஸ்ஸின் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து இடம்பெற்ற வேளையில், சபாநாயகர் டி.ஆர். ஜகத் விக்ரமரத்ன கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்ததாகவும், காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்புவதில் உதவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் நாவுல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.





