உள்ளுராட்சி மன்ற வெளிவாரிப் பணியாளர் நியமன தடைக்கு தீர்வு தரப்படும் என அமைச்சர் சந்திரசேகரன் தவிசாளரிடம் உறுதி

வடக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களில் உள்ள வெளிவாரிப் பணியாளர்களின் நியமனங்களில் காணப்படும் இழுபறிகள் தொடர்பில் சிறந்ததொரு தீர்வை முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸிடம் உறுதியளித்தார்.

தற்போது அரச சேவையில் தற்காலிக, பதிலீடு, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவோரை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை முடிவு எடுத்துள்ள நிலையில், வட மாகாண உள்ளுராட்சி மன்றங்களில் பணியாற்றுவோரின் நியமனப் பிரச்சினைகள் தொடர்பில் சந்தித்துப் பேசுவதற்காக அமைச்சரிடம் தவிசாளர் அனுமதி கோரியிருந்தார். இந்நிலையில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைக்கு அமைச்சர் இ.சந்திரசேகரன் நேரில் சென்று தொழிலாளர்களின் நியமனப்பிரச்சினை மற்றும் நடைமுறையில் உள்ள தடைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

இச் சந்திப்பில் தவிசாளர், அரசாங்கங்கள் 180 நாட்களை நிறைவு செய்தவர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்காக அவ்வப்போது சுற்றுநிருபங்கள் வெளியிடப்பட்ட போதும் எமது வடக்கு மாகாண தொழிலாளர்கள் பயனடைய முடியவில்லை.

முகாமைத்துவச் சேவைகள் திணைக்களத்தின் சுற்றறிக்கை (2/2020) பிரகாரம் ராஜபக்சாக்கள் காலத்தில் பல்தேசிய செயலணியின் ஊடாக இராணுவமயமாக்கப்பட்ட நியமனங்களை புகுத்துவதற்கு முயற்சிக்கப்பட்டது. அது ஏற்கனவே வெளிவாரி பணியாளர்களாக நியமனங்களுக்காக காத்திருந்தவர்களை நடுவீதியில் விடுவதாக அமைந்தது. அதனை நாம் எதிர்த்தோம்.

ஏலவே முகாமைத்தவ சேவைகள் திணைக்களத்தின் (03/2018) கூற்றுநிருபத்தின் பிரகாரம் அரச நியமனங்களை வழங்குவதற்குக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட ஆளணியின் பிரகாரம் வெற்றிடங்களை நிரப்ப நாம் கோரிக்கை முன்வைத்தும் இதுவரையில் சாதகமான பதில்கள் கிட்டவில்லை.

தற்போதைய அரசாங்கம் அறிவித்துள்ள 180 நாள் நியமனத்திலும் எமது உள்ளுராட்சித் தொழிலாளர்கள் உள்வாங்கப்படுவதற்கு தடைகள் உள்ளன. மாகாண சபையின் சுற்றறிக்கை ஒன்றின் பிரகாரம் எமது உள்ளுராட்சி சபைகள் அமைய தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் நியமனங்களை மேற்கொள்ள காணப்படும் தடைகளால் 2018 ஆம் ஆண்டு முதல் அரசாங்கங்கள் வெளியிட்ட 180 நாட்கள் பணியாற்றியோருக்க நியமனம் வழங்கும் அமைச்சரவை அனுமதிகளின் பலன்களையும் நாம்; 4 தடவைகள் வரை ஏற்கனவே இழந்து விட்டோம். இப்போதும் நாம் இழக்கின்றோம்.

நாட்டின் பிற மாகாணங்களைக் காட்டிலும் உள்ளுராட்சி மன்றங்கள் பல ஆண்டுகளாக நியமனம் அற்றுள்ளன. இதனால் சபை நிதி இழப்பு மற்றும் சேவை வழங்களில் பாதிப்பு ஏற்படுகின்றது. தொழிலாளர்களின் தனிப்பட்ட வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பொருத்தமான முறையில் வடக்கில் உள்ள ஒரேயொரு அமைச்சர் என்ற வகையில் தாங்கள் தீர்வைப் பெற்றுத்தரவேண்டும். அமைச்சரவை முடிவுகளில் தாங்கள் இவ்விடயத்தில் தாக்கம் செலுத்த வேண்டும் என தவிசாளர் தியாகராஜா நிரோ~; கேட்டுக்கொண்டார். இச் சந்திப்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் செயலாளர் இராமலிங்கம் பகிரதனும் சபை சார்ந்து மத்திய அரசினால் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகளை அமைச்சரின் கவனத்திற்குக்; கொண்டு வந்தார்.

பாதிக்கப்படும் தொழிலாளர்களும் தமது நியமனக் கோரிக்கையினை முன்வைத்தனர். இந் நிலையில் தொழிலாளர்களின் ஆவணங்கள், சேவைக்கால ஆவணங்கள், சபையில் காணப்படும் வெளிவாரி தொழிலாளர் தொடர்பான நிர்வாக முறையான ஆவணங்களையும் அறிக்கைகளையும் பெற்று பார்வையிட்டு விபரங்களை ஆராய்ந்த அமைச்சர் தொலைபேசியில் பொதுநிர்வாக உள்நாட்டளுவல்கள் அமைச்சருடன் பேசியதுடன் அரசாங்கம் இவ்விடயத்தில் உத்தியோகபூர்வ அறிக்கைளைப் விரைவாகப் பெற்று பொருத்தமான தீர்வொன்றை விரைவில் முன்வைப்பதாக உறுதியளித்தார்.

யாழ் மாவட்டத்தில் 400 க்கு மேற்பட்ட பணியாளர்கள் வெளிவாhரியாக உள்ளுராட்சி மன்றங்களில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.