கொழும்பில் ஏப்ரல் மாத பணவீக்கம் 5.4 சதவீதமாக அதிகரிப்பு

கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் ஏப்ரல் மாதத்திற்கான நுகர்வோர் பணவீக்க விகிதம் 5.4 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 2.2 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் 5.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.

2026 மார்ச் மாதத்தில் 0.7 சதவீதமாகக் காணப்பட்ட உணவுப் பிரிவின் வருடாந்த பணவீக்கம் , ஏப்ரல் மாதத்தில் 2.8 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

உணவு அல்லாத பிரிவின் வருடாந்த பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 6.8 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இது மார்ச் மாதத்தில் 2.9 சதவீதமாகப் பதிவாகியிருந்தது.

பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் கணிசமாக உயர்ந்துள்ளமையை இந்தப் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.