கலாச்சாரத்தை சீரழித்து எந்தவொரு நாடும் முன்னேற்றமடைந்ததில்லை விவசாயிகளை மீண்டும் வீழ்ச்சியடையாதவாறு பாதுகாப்போம்!

எமது இலங்கை நாகரிகத்தின் முன்னோடியாகவும் அடித்தளமாகவும் விளங்குவது விவசாய நாகரிகமே ஆகும். ஆனால், இன்றைய அரசாங்கம் இந்த நாட்டின் நாகரிகத்தின் முன்னோடி ஒரு சட்டவிரோத மது உற்பத்தியாளர் என்று கூறி எமது பாரம்பரியத்தை சீரழிக்க முற்படுகின்றது. கலாச்சாரத்தை சீரழித்து எந்தவொரு நாடும் முன்னேற்றமடைந்ததில்லை என சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்தார்.

தெஹியத்தகண்டிய பிரதேச சபை மைதானத்தில் சனிக்கிழமை (18) நடைபெற்ற விவசாயிகளின் பேரணி 2026 விவசாய மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் மற்றும் பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவிலான விவசாய மக்கள் கலந்துகொண்டனர். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய அரசாங்கம் இந்த நாட்டின் நாகரிகத்தின் முன்னோடி ஒரு சட்டவிரோத மது உற்பத்தியாளர் என்று கூறி எமது விவசாய பாரம்பரியத்தை சீரழிக்க முற்படுகின்றது. இந்த நாட்டில் நமக்கென்று ஒரு தனித்துவமான கலாச்சாரம் இருக்கிறது என்பதையும், எதிர்காலத்தில் இந்த நாட்டை உலகளாவிய ரீதியிலும் பிராந்திய ரீதியிலும் போட்டியிடச் செய்து முன்னேற்றமடையச் செய்ய வேண்டுமாயின், நாம் எமது கலாச்சாரத்தின் மீது மாத்திரம் அடித்தளமிட்டு செயற்பட்டால் மாத்திரமே அது சாத்தியமாகும் என்பதையும் அவர்கள் தங்களின் இதயப்பூர்வமாக நம்பவில்லை. உலகில் எந்தவொரு நாடும் தங்களின் கலாச்சாரத்தை சீரழித்து முன்னேற்றமடைந்ததில்லை.

இந்த மக்களுக்கு நட்டமே ஏற்படுகிறது. இந்த மக்கள் தங்களின் நகைகளை அடகு வைத்து, தங்களின் காணியை அடகு வைத்து, தங்களின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கடனாளியாக மாறியுள்ளனர். அவ்வாறு இருந்தும் ஏன் அவர்கள் இதிலேயே நிலைத்திருக்கிறார்கள் என்றால், இந்த கலாச்சாரத்துக்குள் விவசாயம் செய்வது தங்களின் கடமை என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்த தொழில்முனைவு என்ற அணுகுமுறையின்றி எமது விவசாயியை மீண்டும் வீழ்ச்சியடையாதவாறு கட்டியெழுப்புவதற்கு நமக்கு வேறு வழியில்லை.

சர்வஜன அதிகாரம் என்ற ரீதியில் நாம் உங்களுக்கு சார்பாக நின்று பேசுவது, எக்காலத்திலும் உங்களுக்கு மீண்டும் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாதவாறு அதற்கான தீர்வை வழங்குவதற்காகவே ஆகும் என்றார்.