குருவிட்ட சிறைச்சாலையில் பதற்றமான சூழ்நிலை!

குருவிட்ட சிறைச்சாலையின் கைதிகள் சிலருக்கிடையில் வெள்ளிக்கிழமை (07) பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (06) இரவு இந்தப் பதற்றநிலை ஏற்பட்டதாகவும், பின்னர் அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சிறைச்சாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இருப்பினும், இன்று காலை கைதிகளுக்கு இடையே மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கைதிகள் சிலர் சிறைச்சாலை மருத்துவமனைக்கும் சேதம் விளைவித்துள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக, சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காகக் கண்ணீர்ப்புகைப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையிலும் நேற்று இரவு கைதிகள் சிலருக்கிடையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து பொலிஸார், பொலிஸாரின் கலகத் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை உடனடியாக அழைக்கப்பட்டு, இன்று அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.