மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் இன்று (07) வெள்ளிக்கிழமை ஈடுபட்டுவருவதுடன், இராணுவ மோட்டர் சைக்கிள் பிரிவு சிறைச்சாலை பகுதியை சுற்று ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன், கைதிகள் பாதுகாப்பாக இருப்பதாக சிறைச்சாலை அதியட்சகர் மோகன் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டு சிறைச்சாலைகளை உடைத்து வருகின்றனர். இந்நிலையில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்டட சிறை உடைப்பை அடுத்து அங்கிருந்து 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் நிறுத்தப்பட்டதுடன், விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை, இராணுவ மோட்டார் சைக்கிள் பிரிவினர் சிறைச்சாலை பகுதியை சுற்றியுள்ள வீதிகளில் ரோந்து நடவடிக்கையினை மேற்கொண்டுவருவதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அத்துடன், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தின சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு சென்று பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக சிறைச்சாலை ஆராய்ந்து கொண்டார்.
தற்போது குறித்த சிறைச்சாலையில் நீர் கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட 60 கைதிகளில் 42 பேர் உள்ளதுடன், இன்றையதினம் 980 பேர் சிறையில் உள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக சிறைச்சாலை அதியட்சகர் மோகன் தெரிவித்தார்



