சிகிச்சை பெற்றுக் குணமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்குப் பேருதவி

குடலில் ஏற்பட்ட கடுமையான நோய் மற்றும் கடுமையான வயிற்றுப் பகுதித் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் குணமடைந்தமைக்கு நன்றியறிதலாக எல்.கேதீஸ்வரன் என்பவர் தனது நண்பர்களுடன் இணைந்து பெறுமதியான மருத்துவ உபகரணமொன்றை இன்று வெள்ளிக்கிழமை

(05.06.2026) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நன்கொடையாகக் கையளித்துள்ளார்.
சுற்றுச் சூழல் மீது அக்கறை கொண்டவராகிய கேதீஸ்வரன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தில் பூக்கும் மரங்களை நடுவதன் மூலம் நோயாளிகள், பார்வையாளர்கள், பணியாளர்களுக்கு அழகானதும், மன அமைதியளிப்பதுமான சூழலை உருவாக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.