டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் நேற்று சனிக்கிழமை (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும், பஸ் கட்டண திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினாலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினாலும் உயர்த்தப்படுவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.