தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதியாக வே. இராதாகிருஷ்ணன் நியமனம்

தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியாக, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதி தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் சனிக்கிழமை (25) நடைபெற்ற கலந்துரையாடலில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமை குழுவின் தீர்மானத்தின்படி இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

தமிழ் பேசும் மக்களின் உரிமை போராட்டத்துக்கும் அவர்களின் அரசியல் முன்னெடுப்புகளுக்கும் கூட்டணி என்றும் முன்னுரிமை அளித்து செயலாற்றி வருகின்றது. அந்தவகையில், தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவையில் கூட்டணியின் சார்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதி தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் பிரதிநிதித்துவப்படுத்துவார்.

மேலும் கூட்டணியின் அரசியல் குழு உறுப்பினரான பரத் அருள்சாமியும் இந்த பேரவையில் தமிழ் முற்போக்கு கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதி தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணனுக்கு துணையாகவும் உதவியாகவும் செயல்படுவார்.

அத்துடன், தமிழ் பேசும் மக்களுக்கான ஐக்கியமான அரசியல் பயணத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பங்களிப்பு உறுதியான முறையில் தொடரும் என கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.