புங்குடுதீவில் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு

யாழ் புங்குடுதீவு ஆலடிச் சந்தியிலிருந்து சின்ன ஆலடி வரையிலான இரண்டு கிலோ மீற்றர் நீளமான வீதியின் இரு மருங்கும் சிரமதானப் பணிகள் மூலம் வெள்ளிக்கிழமை (24.07.2026) துப்புரவு செய்யப்பட்டுள்ளன.

புங்குடுதீவு ஜே- 25 கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் கருணாகரன் குணாளன் விடுத்த வேண்டுகோளுக்கிணங்கச் சுவிற்சர்லாந்து- புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினரின் நிதி உதவியில் குறித்த சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.