தாயகக் கலைஞன் சங்கீதனை விடுவிக்கக் கோரிக் கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்

அரச பயங்கரவாதத்தால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தாயகக் கலைஞன் சங்கீதனை விடுவிக்கக் கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்  சனிக்கிழமை (06.06.2026) காலை-09.30 மணியளவில் கிளிநொச்சியிலுள்ள பழைய கச்சேரி முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளது.
கிளிநொச்சி மாவட்டப் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது. குரல்வளையின் விலங்குடைக்க அனைவரையும் போராட்டத்தில் அணிதிரளுமாறு போராட்ட ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.