தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக மீண்டும் தொடர் போராட்டம்

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தியும் , திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் கையளிக்குமாறு கோரியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் இணைந்து மாதாமாதம் முன்னெடுக்கும் தொடர் போராட்டம் பொசன் பெளர்ணமி நாளான திங்கட்கிழமை (29.06.2026) காலை-07 மணி முதல் மாலை-06 மணி வரை யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை மாலை போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இரண்டாவது நாளாகத் திங்கட்கிழமையும் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.