மக்களின் வாழ்நாளை நீட்டிக்க பாடுபடும் மருத்துவர்களின் வாழ்நாள் குறைகிறது!

நாடு​முழு​வதும் தேசிய மருத்​து​வர் தினம் ஆண்டு தோறும் ஜூலை 1-ம் தேதி (இன்​று) கொண்​டாடப்​படு​கிறது. புகழ்​பெற்ற மருத்​து​ வரும், மேற்கு வங்​கத்​தின் முன்​னாள் முதல்​வரு​மான மருத்​து​வர் பிதான் சந்​திர ராய் அவர்​களின் பிறந்த நாள் மற்​றும் நினைவு நாளான இந்​நாளினை மருத்​து​வர்​களின் அரும் பணியை போற்​றும் வகை​யில் மருத்​து​வர்​கள் தின​மாக கொண்​டாடு​கிறோம்.

தங்​கள் சுயநலனை பார்க்​காமல், நோயாளி​களின் துயர் துடைக்க இரவு, பகலாக உழைக்​கும் மாமனிதர்​களை கவுரவிக்​கும் வித​மாகவே தேசிய மருத்​து​வர்​கள் தினம் கொண்​டாடப்​படு​கிறது. தேசிய மருத்​து​வர் தினத்​தின் இந்த ஆண்டு கருப்​பொருள் ‘முகமூடிக்கு பின்​னால்: குணப்​படுத்​துபவர்​களை குணப்​படுத்​து​வதுயார்? (Behind the Mask: Who Heals the Healers?’ என்​ப​தாகும்.

ஒரு மருத்​து​வர் ஆவது என்​பது எளி​தான பயணம் அல்ல. பல ஆண்​டு​கள் கடுமை​யான படிப்​பு, இரவு, பகல் பாராத மருத்​து​வ​மனை பயிற்சி மற்​றும் தொடர்ச்​சி​யான ஆராய்ச்​சிகள் என அனைத்​தும் நிறைந்த ஒரு தவம். ஒரு மருத்​து​வரின் பணிநேரம் என்​பது கடி​கார முட்​களுக்​குள் அடங்​கு​வ​தில்​லை.

தங்​கள் குடும்​பத்​தினருடன் செல​விடவேண்​டிய பொன்​னான தருணங்​களை இழந்​து, சமூகத்​தின் நலனை தங்​கள் குடும்​பத்​தின் நலனுக்கு மேலாக மதிக்​கின்​றனர். உலகையே அச்​சுறுத்​திய கரோ​னாதொற்​றுக் காலத்​தில் மருத்​து​வர்​கள் ஆற்​றிய தியாகம் ஈடு இணை​யற்​றது. தங்​கள் குடும்​பத்​தினரை கூட பார்க்க முடி​யாமல் பிபிஇ உடைகளை அணிந்து கொண்​டு, மாதக் கணக்​கில் மருத்​து​வ​மனை​களில் தங்கி,கோடிக்​கணக்​கான உயிர்​களை காப்​பாற்​றி​யுள்​ளனர். பல மருத்​து​வர்​கள் இந்த சேவை​யின் போது தங்​கள் இன்​னு​யிரை தியாகம் செய்​துள்​ளனர்.

இன்று மக்​களின் சராசரி ஆயுட்​காலம் 72 முதல் 74 ஆண்​டு​களாக இருக்​கும் நிலை​யில், மருத்​து​வர்​களின் சராசரி ஆயுட்​காலம் 55 முதல் 59 ஆண்​டு​களாக உள்​ளது. அதாவது மக்​களின் வாழ்​நாளை நீட்​டிக்க பாடு​படும் மருத்​து​வர்​கள் தங்​களின் வாழ்​நாளை குறைத்து வரு​கின்​றனர் என்​பது தான் வருத்​த​மான உண்​மை.

மருத்​து​வர்​களின் ஆயுட்​காலம் சராசரி மனிதனை விட குறை​வாக இருப்​ப​தற்கு தீவிர​மான பணிசூழல், ஓய்​வின்றி உழைப்​பது, அதிக மன அழுத்​தம் ஆகியன முக்​கிய காரணங்​கள் ஆகும். மற்​றவர்​களின் உயிரை காப்​பாற்​றும் இவர்​கள், தங்​கள் சொந்த ஆரோக்​கி​யத்தை கவனிப்​ப​தில் கவனம் செலுத்​த​வில்​லை.

வளர்ந்த நாடு​களில் கூட ஒவ்​வொரு மருத்துவரும் ஒரு நாளைக்கு அதி​கபட்​ச​மாக 20 முதல் 25 நோயாளி​களை தான் பார்க்​கின்​றனர். ஆனால் தமிழகத்​திலோ எண்​ணிக்கை வரம்பு இன்றி ஏராள​மான நோயாளி​களை பார்க்​கின்​றனர். உதா​ரண​மாக ஏழரை கோடி மக்​கள் தொகையை கொண்ட இங்​கிலாந்து நாட்​டில் 1.85 லட்​சம் மருத்​து​வர்​கள் பணி செய்​கின்​றனர்.

ஆனால் கிட்​டத்​தட்ட அதே அளவு மக்​கள் தொகை கொண்ட தமிழகத்​தில் 19 ஆயிரம் அரசு மருத்​து​வர்​கள் மட்​டுமே பணி செய்​வது என்​பது, எந்த அளவு பணிச்​சுமை அதி​க​மாக உள்​ளது என்​பதை காட்​டு​கிறது. ஆனால், உரிய ஊதி​யம் மறுக்​கப்​படு​வது மிகுந்த மன உளைச்​சலை தரு​கிறது.

மகப்​பேறு இறப்பு விகிதம் மற்​றும் குழந்தை இறப்பு விகிதத்தை கணிச​மாக குறைத்​துள்​ளதோடு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்​சை​யில் தமிழகத்தை தொடர்ந்து 7 ஆண்​டு​களாக முதலிடத்​தில் நிலைநிறுத்தி வரும் அரசு மருத்​து​வர்​களுக்கு உரிய ஊதி​யத்தை வழங்கி கவுரவிக்க வேண்​டும்.

அரசாணை 354-ஐ அமல்​படுத்தி அதன்​படி அரசு மருத்​து​வர்​களுக்கு ஊதி​யம் வழங்க வேண்​டும். கரோனா பேரிடரின் போது மக்​களை காப்​பாற்ற போராடி உயி​ரிழந்த அரசு மருத்​து​வர் விவே​கானந்​தன் மனை​விக்கு அரசு வேலை மற்​றும் நிவாரணம் வழங்க வேண்​டும். மருத்​து​வர்​கள் மீதான தாக்​குதலை தடுக்க அரசு கடுமை​யான சட்​டங்​களை அமல்​படுத்​தி, விரை​வான நீதி மற்​றும் தண்​டனையை உறுதி செய்ய வேண்​டும்.

அரசு மருத்​து​வ​மனை​களில் தீவிர கண்​காணிப்பு கேம​ராக்​கள், அவசர கால அலாரம் மற்​றும் தகுந்த காவலர் பாது​காப்பு வழங்​கப்பட வேண்​டும். மருத்​து​வ​மனைக்கு நுழை​யும் பார்​வை​யாளர்​கள் எண்​ணிக்​கையை கட்​டுப்​படுத்​துதல் மற்​றும் தகவல் தொடர்பு முறை​களை மேம்​படுத்த வேண்​டும். தமிழகத்​தில் அரசு மருத்​து​வ​மனை​களில் மருத்​து​வர் பணி​யிடங்​களை இரண்டு மடங்​காக அதி​கரிக்க வேண்​டும்.

அதனால் மருத்​து​வர்​கள் மட்​டுமன்றி மக்​களும் பெரிதும் பயனடை​வார்​கள். மற்ற அரசு ஊழியர்​களை போல வாரத்​துக்கு இரண்டு நாள் ஓய்வு வழங்க வேண்​டும். அரசு மருத்​து​வர்​களின் கோரிக்​கையை நிறைவேற்​றி​னால், தமிழக சுகா​தா​ரத்​துறையை இன்​னும் சிறப்​பாக, அடுத்த கட்​டத்​துக்கு கொண்டு செல்ல முடி​யும் என்று அரசு மருத்​து​வர்​களுக்​கான சட்​டப்​போ​ராட்டக்​ குழு தலை​வர்​ மருத்​து​வர்​ எஸ்​.பெரு​மாள்​ பிள்​ளை தெரிவித்​துள்​ளார்​.