நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: சுயாதீன விசாரணைக்குழு ஸ்தாபிப்புக்கு ஐ.நா.வரவேற்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற கொடூரமான மோதல் சம்பவங்கள் குறித்த பின்னணிச் சூழலை ஆராய்வதற்காக, சுயாதீனக் குழுவொன்றை நியமிக்க இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளதுடன், இக்குழுவின் கண்டுபிடிப்புகள் நாட்டின் சிறைச்சாலை கட்டமைப்பில் ஆக்கபூர்வமான, நீடித்த சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரண்டு நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற வன்முறைகள் தொடர்பில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் அன்றூ பிஞ்சே வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.