படகிலிருந்து தவறி விழுந்து அதிபர் உயிரிழப்பு: யாழ். நயினாதீவில் சோகம்!

யாழ்.நயினாதீவுக் கடற்பரப்பில் இன்று வியாழக்கிழமை (28.05.2026) மாலை படகிலிருந்து தவறி விழுந்ததில் நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகா மகாவித்தியாலய அதிபர் நீரினுள் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நயினாதீவைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான நடராசா மயூரன் (வயது-48) என்பவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.
நயினாதீவு ஸ்ரீ கணேசா கனிஷ்ட மகா வித்தியாலய அதிபராக இவர் அண்மையில் பொறுப்பேற்றுப் பாடசாலையைச் சிறப்பாக நிர்வகித்து வந்த நிலையிலேயே இந்தச் சோகச் சம்பவம் நடந்துள்ளது.