“மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம்” நூல் அறிமுகம்

மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டத்தின் 1000 நாள் நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட நிகழ்வின் ஒரு அங்கமாக எழுநாவின் வெளியீடாகிய வை. ஜெயமுருகனின் “மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம்” நூல் அறிமுக நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வானது சித்தாண்டி, போராட்டப் பந்தலடி கூடாரத்தில் இன்று (15) திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்வில், நூலிற்கான அறிமுகவுரையினை சார்ள்ஸ் அன்ரனிதாஸ் அவர்கள் வழங்கியதுடன், நூல் ஆய்வுரையை க. குருநாதன் வழங்கி வைத்தார்.

நிகழ்வில் சமயத்தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள்,ஊடகவியலாளர்கள்,பண்ணை யாளர்கள், பொது மக்கள் என பலதரப்பட்டோரும் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகள்