முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான ரோஹித ராஜபக்ஷ, வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக சற்று முன்னர் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் ஆஜராகியுள்ளார்.
மிரிஹான பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் அவர் மேற்கொண்ட முதலீடு தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுக்கு அமைவாகவே, ரோஹித ராஜபக்ஷ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





