மன்னார் பறயநாளன் குளம் பகுதியில் அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து ; நால்வர் காயம்

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் இன்று (22) புதன்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் பறைய நாளங்குளம் இரும்பு பாலத்தில் விபத்துக்குள்ளானது.

இதன்போது குறித்த வாகனத்தில் பயணித்த 4 அருட்சகோதரிகள் காயமடைந்த நிலையில் அவர்கள் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் ஒரு அருட்சகோதரி பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மன்னாரைச் சேர்ந்த மாசற்ற அமலோற்பவ அன்னை சபையைச்  சேர்ந்த அருட்சகோதரிகள் பயணித்த வாகனமே விபத்துக்கு உள்ளாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்