ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று வெள்ளிக்கிழமை (01) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 748 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, 754 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன் ஒருவர்; புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
குறித்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேகநபர்கள் வைத்திருந்த போதைப்பொருட்களையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அதற்கமைய, சந்தேகநபர்களிடமிருந்து 256 கிராம் ஹெரோயின், 485 கிராம் ஐஸ், 25 கிராம் கொக்கெய்ன், 03 கிலோகிராம் 822 கிராம் கஞ்சா, 89,712 கஞ்சா செடிகள், 250 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 05 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 302 போதை மாத்திரைகள், 35 கிராம் மதனமோதகம் மற்றும் 44 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



