யாழ்ப்பாணத்தில் கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு அருகில் செவ்வாய்க்கிழமை (05) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.
கரவெட்டி வடக்கைச் சேர்ந்த 22 வயதுடைய மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களுமே உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து தமது வீட்டை நோக்கி வேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை மோட்டார் சைக்கிளை திருப்ப முற்பட்ட வேளை , மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து குறித்து கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலங்களை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணை யாழ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





