யாழ் கடற்கரைப் பகுதியில் துப்புரவுப் பணிகள் முன்னெடுப்பு

Jaffna Runners அமைப்பினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பண்ணை முதல் மண்டைதீவுச் சந்தி வரையான இரண்டு கிலோ மீற்றர் கடற்கரைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (03.05.2026) துப்புரவுப் பணிகள் செய்யப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை தோறும் முன்னெடுக்கப்படும் ஐந்து கிலோ மீற்றர் ஓட்டத்தில் இணைந்து கொள்ளும் பலரும், சமூக அக்கறை கொண்ட தன்னார்வலர்களும் குறித்த சிரமதான நிகழ்வில் உற்சாகமாக கலந்து கொண்டனர்.