ரத்மலானை, கந்தவல சந்திப் பகுதியில் இன்று (1) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் ரத்மலானை பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய நபராவார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

