வழுக்கையாற்றை மீள உயிர்ப்பிக்கும் நோக்கில் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளுடனான களப்பயணம் முன்னெடுப்பு (Photos) யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் வழுக்கையாற்றின் வழித்தடங்களிலுள்ள குளங்களை, நீர்த்தேக்கங்களைப் பாதுகாப்பதும், பொறுப்பாக மக்கள் மயப்படுத்தப்பட்ட நீர்வள ஆளுகையை நோக்கிச் செல்வதும் தொடர்பில் நான்கு உள்ளூராட்சி மன்றங்களையும் சேர்ந்த வட்டார உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் WASPAR செயற்திட்டத்தின் நான்காவது கட்டமான களப்பயணமும் உரையாடலும் ஞாயிற்றுக்கிழமை (24.05.2026) இடம்பெற்றது.
வலிகாமம் வடக்குப் பிரதே சபைக்குட்பட்ட வறுத்தலைவிளான் குளத்தடியில் காலை-09 மணியளவில் பேராசிரியர் சிறிஸ்கந்தராஜா தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் வலிகாமம் வடக்கு, வலிகாமம் தெற்கு, வலிகாமம் தென்மேற்கு, வலிகாமம் மேற்கு ஆகிய நான்கு உள்ளூராட்சி மன்றங்களையும் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளும், கிராம மக்களும் ஆர்வத்துடன் இணைந்து கொண்டனர்.






