வவுனியாவில் தீயில் முற்றாக எரிந்து கருகிய வீடு

வவுனியா, தம்பனைபுளியங்குளம் பகுதியில் வீடு ஒன்று தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்னர்.

சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.அயலவர்களின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்தமையினால் மேலதிக அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மின்சார கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.