விடுமுறைக்காக சென்றவர்கள் திரும்ப இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள் !

சித்திரை புத்தாண்டு விடுமுறைக்காகத் தமது சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் திரும்புவதற்காக இன்று புதன்கிழமை (15) முதல் மேலதிக பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பயணிகளின் தேவையைக் கருத்திற்கொண்டு பஸ்களைத் தடையின்றி இயக்குவதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் அனைத்து மாகாண போக்குவரத்து அதிகார சபைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக அதன் போக்குவரத்துப் பணிப்பாளர் ஷெரின் அத்துகோரல குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்று சாதாரண அலுவலகத் தினமாகும் என்பதால் அலுவலக ரயில்கள் வழமை போன்று இயக்கப்படும் எனத் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து மேலதிக ரயில்களையும் சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் ரயில்வே போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.